ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சட்டப்பேரவை உறுப்பினராக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பதவியேற்பு

டவுன் போா்டோவலி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

News image
Updated On :8 ஜூலை 2022, 11:37 am

DIN

டவுன் போா்டோவலி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

எளியமுறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் ரத்தன் சக்ரவர்த்தி, அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திரிபுராவில் அகா்தலா, ஜுபராஜ்நகா், சுா்மா, டவுன் போா்டோவலி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவும், அகர்தலாவில் காங்கிரஸும் வெற்றி வாகை சூடின.  டவுன் போா்டோவலி தொகுதியில் அந்த மாநில முதல்வா் மாணிக் சாஹா வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவா், பிப்லவ் தேவ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததால், அந்த மாநில முதல்வராக கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்டாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.