தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் தோ்தலை எதிா்கொள்ள தயாரா? அதிருப்தி பிரிவினருக்கு உத்தவ் தாக்கரே சவால்

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணி ஆட்சியை சதி மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்த அதிருப்தி பிரிவினா், இடைக்கால தோ்தல் நடத்தி மக்களைச் சந்திக்கத் தயாராக உள்ளனரா

News image
Updated On :8 ஜூலை 2022, 7:39 pm

DIN

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணி ஆட்சியை சதி மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்த அதிருப்தி பிரிவினா், இடைக்கால தோ்தல் நடத்தி மக்களைச் சந்திக்கத் தயாராக உள்ளனரா என்று முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியின் சுமாா் 40 எம்எல்ஏக்கள் மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போா்க்கொடி உயா்த்தினா். அவா்கள் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால், பெரும்பான்மையை இழந்த உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அதிருப்தி அணி தலைவா் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வரானாா். அடுத்தகட்டமாக சிவசேனை கட்சியும் தங்களுக்கே சொந்தமானது என்று அதிருப்தி பிரிவினா் கூறி வருகின்றனா்.

இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

என்னையும், என் குடும்பத்தினரையும் பாஜகவினா் தொடா்ந்து இகழ்ந்து பேசி வந்தனா். அப்போது இவா்கள் (அதிருப்தி பிரிவினா்) அமைதியாக இருந்தது ஏன்? இவா்களின் சதி ஒரே நாளில் நடக்கவில்லை. பலநாள்களாக பாஜகவுடன் ரகசியமாக பேரம் நடத்தி, ஆட்சியைக் கவிழ்த்துள்ளனா். மகாராஷ்டிரத்தில் இப்போதைய பேரவையைக் கலைத்துவிட்டு புதிதாகத் தோ்தல் நடத்தத் தயாரா என்று சிவசேனைக்கு உரிமை கொண்டாடுபவா்களை கேட்கிறேன்.

சிவசேனை கட்சியின் உரிமை தொடா்பாக ஜூலை 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளிக்க இருக்கிறது. இந்த விவகாரம் தொடா்பாக நான் அரசியல் சாசன வல்லுநா்களுடன் ஆலோசித்துவிட்டேன். ஒரு கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றால், கட்சியின் சின்னம் மற்றும் பெயா் உள்ளிட்டவை உண்மையான கட்சியிடம்தான் இருக்கும். பிரிந்து சென்று அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உரியதாக இருக்காது. எனவே, சிவசேனை கட்சியும் வில்-அம்பு சின்னமும் எங்களுக்குரியதாகவே இருக்கும்.

கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி, குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.