கோப்புப்படம்
கோப்புப்படம்

ம.பி.: கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கி 16 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை காலை, ஷிவ்புரியில் மின்னல் தாக்கியதில் 60 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவரின் மகன் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளியன்று, ஷியோபூர் மாவட்டத்தில் வனப் பகுதிக்கு சுற்றுலா சென்ற 6 கல்லூரி மாணவர்களுக்கு மின்னல் தாக்கப்பட்டதில் 3 பேர் பலியாகினர். 3 பேர் கடுமையாக காயமடைந்து குவாலியர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

பிண்டில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சுகந்த் கிராமத்தில் ராம்காலி (70) மற்றும் ஞானோதேவி (40) என 2 பெண்கள் மின்னல் தாக்கி பலியாகினர்.

சத்தர்பூரில், மஹராஜ்கஞ்ச் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தாயும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே மின்னலுக்கு பலியாகினர். இதேபோன்று  அமர்வான் கிராமத்தில் மற்றொரு 50 வயது பெண் விவசாயி மின்னலுக்கு பலியானார்.

மற்ற சம்பவங்களில், ஷிவ்புரியைச் சேர்ந்த 35 வயதான ஒருவரும், குவாலியரில் 30 மற்றும் 40 வயதுடைய 2 பேர்  இதே காரணத்தால் இறந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் 8 மாவட்டங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஷியோபூர், ஷிவ்புரி, குணா, அகர், ராஜ்கர், நீமுச், மண்ட்சௌர், உஜ்ஜைன், பிந்த், ரத்லாம், தோலவாட், ஷாஜாபூர் போன்ற பகுதிகள் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com