
மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக புணே உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்கும் வகையில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி - கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பல்கார் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இன்று ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், பல்கார், நாஸிக், புணே ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மும்பை, ரத்னகிரி, கோகல்பூர், அமராவதி, தாணே ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.