ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மகாராஷ்டிரத்தில் தொடரும் கனமழை: இதுவரை 89 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 89 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2022, 7:56 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 89 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உயிர்சேதமும், பொருள் சேதமும் அதிகரித்து வருகின்றது.

மகாராஷ்டிரத்தின் மும்பை, தானே, நாசிக், புணே, நாக்பூர் உள்பட 27 மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் 249 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 5 பேர் பலியான நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது. மேலும், காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

கனமழையால் 1,368 வீடுகள் சேதமடைந்த நிலையில், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.