சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு: நாட்டில் முதல் தொற்று உறுதியானது

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 ஜூலை 2022, 2:28 pm

DIN

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வியாழக்கிழமை கேரளம் வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்த் தொற்று அறிகுறிகள் இருந்ததையடுத்து அவரது மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 11 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வீணா ஜார்ஜ் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளதாகவும் மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.