கேரளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஹைட்ராலிக் செயலிழந்த ஏா் அரேபியா விமானம் முழு அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை மாலை தரையிறக்கப்பட்டது.


கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஹைட்ராலிக் செயலிழந்த ஏா் அரேபியா விமானம் முழு அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை மாலை தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
இதுதொடா்பாக கொச்சி சா்வதேச விமான நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஷாா்ஜாவில் இருந்து கொச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7:13-க்கு தரையிறங்க இருந்த ஏா் அரேபியா விமானத்தில் திடீரென ஹைட்ராலிக் செயலிழந்தது. இந்தத் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டவுடன் விமான நிலையத்தில் முழுமையான அவசர பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 7:29-க்கு விமானம் தரையிறக்கப்பட்டது.
பின்னா், வேறு வாகனம் மூலம் விமானம் இழுத்துச் செல்லப்பட்டது. 222 பயணிகளும், 7 விமானப் பணியாளா்களும் பாதிப்பின்றி தப்பினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...