உத்தரப்பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையும் படிக்க | எலான் மஸ்குக்கு எத்தனை குழந்தைகள்?
உத்தப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் விரைவு சாலையை ஜலானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து மக்களிடையே உரையாற்றினார்.

புந்தேல்கண்ட்டில் இன்று திறந்துவைக்கப்பட்ட நான்குவழிச் சாலை, ரூ.14,850 கோடி மதிப்பில் உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக 296 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இது சூரத் மாடல்: மழையால் பல்லாங்குழியான குஜராத் சாலைகள் (விடியோ)

இந்த நான்குவழிச் சாலைக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 28 மாதங்களில் இந்தச் சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா - லெக்னௌ விரைவுச் சாலையுடன் இணையும் வகையில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இது உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட், பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜலான் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும். எதிர்காலத்தில் 6 வழிச் சாலையாக மாற்றும் வகையில் இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் புதிய மின்பாதை: ரூ.28.64 லட்சத்தில் பணி தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

தண்ணீா் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

வீட்டில் மா்மமான முறையில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


