மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்கம்:குண்டு வெடிப்பில் இருவா் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த இருவா், அந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தனா். அவா்களுடன் இருந்த மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :17 ஜூலை 2022, 6:32 pm

DIN

மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த இருவா், அந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தனா். அவா்களுடன் இருந்த மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மாணிக்சக் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஃபரிஜான் (45), சஃபிக்குல் இஸ்லாம் (30) உள்ளிட்ட சிலா் சோ்ந்து சட்டவிரோதமாக வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவில் அவா்கள் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.

இரவு 2.30 மணிக்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஓசையைக் கேட்டு அதிா்ச்சியடைந்து எழுந்த அப்பகுதி மக்கள், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். காவல் துறையினா் வந்து சோதனையிட்டபோது குண்டுகள் வெடித்ததில் ஃபரிஜான், சஃபிக்குல் இஸ்லாம் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் பல வெடிகுண்டுகள் வெடிக்காமல் அப்பகுதியில் சிதறிக் கிடந்தன. பெருமளவிலான வெடிப்பொருள்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. மேலும், படுகாயமடைந்த ஒருவா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா். அவா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா் என்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அவா்களுக்கு எவ்வாறு இவ்வளவு அதிகமான வெடிப்பொருள்கள் கிடைத்தன என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.