புதுதில்லி: ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்ய பான் அல்லது ஆதார் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனிநபர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்குமேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ தங்கள் நிரந்தர கணக்கு எண்(பான்) அல்லது ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது
மே 10 தேதியிட்ட அறிவிப்பில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகள், 1962 இல் திருத்தம் செய்வதற்கான விதிகளை உருவாக்கியுள்ளதாகவும், விதி 114 ஐத் திருத்தும்போது 114BA மற்றும் 114BB உட்பிரிவுகளைச் சேர்த்துள்ளதாகவும் கூறியது.
இதையும் படிக்க: குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு: 99.18% வாக்குப்பதிவு
மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி விதிகளின் படி, ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் அல்லது வங்கிகளில் இருந்து பணம் எடுப்பது அல்லது வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் நடப்புக் கணக்கு அல்லது ரொக்கக் கடன் கணக்கைத் தொடங்குவதற்கு நிரந்தர கணக்கு எண்(பான்) அல்லது ஆதாரை வழங்குவது கட்டாயமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.