மலையாள இலக்கியத்தின் 'கிராண்ட் மதர்' என்று அழைக்கப்படும் கவிஞர் பாலமணி அம்மாவின் 113 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கூகுள் நிறுவனம், அவரை கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
1909 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று திருச்சூர் மாவட்டத்தில் புன்னையூர்குளத்தில் நாலாபத்தில் பிறந்தார் பாலமணி அம்மா. அவர் முறையாக கல்வி கற்காவிட்டாலும் தனது உறவினர் உதவியால், புத்தங்களைப் படித்து தன்னை வளர்த்துக்கொண்டார்.
19 வயதில் மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியர் வி.எம். நாயரை திருமணம் செய்துகொண்டார்.
1930 ஆம் ஆண்டு, தனது 21 வயதில், தனது முதல் கவிதையை 'கூப்புகை' என்ற தலைப்பில் வெளியிட்டார். பெண்களைப் பற்றியும் தாய்மையைப் பற்றியும் பல கவிதைகளை வெளியிட்ட அவர் 'தாய்மையின் கவிஞர்' என்று அறியப்பட்டார். அம்மா (1934), முத்தசி (1962) மற்றும் மழுவின்டே கதை (1966) ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள். தனது கவிதைகளுக்காக சரஸ்வதி சம்மான், பத்ம விபூஷண் என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.
20க்கும் மேற்பட்ட கவிதை, உரைநடை மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிட்டார். 1984ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலா தாஸ் இவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 செப்டம்பர் 29ல் காலமானார்.
இதையும் படிக்க | இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூத்த வாக்காளா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு

கம்பீரமாகக் காட்சியளிக்கும் 400 ஆண்டுகள் பழமையான பாராபுல்லா பாலம்! பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிப்பு

வாக்குகள் எண்ணும் மையம் ஆய்வு

காட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

