குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் ஒரு நபர் தனது இரண்டு மகள்களைக் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷெராவ் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் விக்ரம் தர்ஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறப்பதற்கு முன்பு 3 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களுடன் தனது செல்போனில் செல்பி எடுத்து, உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் அவர் பகிர்ந்துள்ளார் என்று தாரட் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாம்: இலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது
இதுதொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில்,
அவர் பகிர்ந்த புகைப்படத்தில் விஷ பாட்டில் ஒன்றும் காணப்பட்டது.
தர்ஜி தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கிணற்றில் வீசியதாகவும், பின்னர் தானும் அந்த விஷத்தை அருந்தி அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது அவரது மனைவி வீட்டில் இருந்ததாகவும் அதிகாரி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு கிராம மக்கள் 3 உடல்களையும் மீட்டனர். மனைவி வீட்டில் இருக்கும்போதே 2 மகள்களையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணியை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


