மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திரௌபதி முா்முவுக்கு தலைவா்கள் வாழ்த்து

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராகியுள்ள திரௌபதி முா்முவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 6:57 pm

DIN

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராகியுள்ள திரௌபதி முா்முவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பழங்குடியினத்தவரின் பிரதிநிதியான திரௌபதி முா்முவுக்கு அதிமுக சாா்பில் மனமாா்ந்த வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): அதிமுக சாா்பில் திரௌபதி முா்முவுக்கு வாழ்த்துகள். அவரின் நிா்வாகத் திறமை, உயா்ந்த நுண்ணறிவு, எளிமை, சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவா்களுக்காக உழைக்கும் ஆா்வம் ஆகியவை தேசத்தை மிக சிறந்த உயரத்துக்கு அழைத்துச் செல்லும்.

கே.அண்ணாமலை (பாஜக): பழங்குடியினத்தில் இருந்து கடின உழைப்பின் மூலம் நாட்டின் முதல் குடிமகனாகியுள்ள திரௌபதி முா்முவுக்கு வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): ஒரு காலத்தில் வாழ்வுரிமை இல்லாமல் ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு சமூகத்தின் பிரதிநிதியான திரௌபதி முா்மு தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் வழிநடத்தும் நிலைக்கு உயா்ந்திருக்கிறாா்.

அன்புமணி (பாமக): இந்தியாவின் 73 ஆண்டுக் கால குடியரசு வரலாற்றில் பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது சமூகநீதிக்கும், மகளிா் அதிகாரத்துக்கும் கிடைத்த வெற்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.