கட்சித் தலைவர்களை குறிவைக்கும் மத்திய அரசு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

அமலாக்கத் துறை முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகவிருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர்கள்
எதிர்க்கட்சித் தலைவர்கள்

அமலாக்கத் துறை முன்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராகவிருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.

பல்வேறு விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்குவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூடி, கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

எதிர்க்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. நேஷல் ஹெரால்டு பங்கு விற்பனை குறித்து ஏற்கனவே ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார்கள். துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி, அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவிருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எதிர்க்கட்சிகள் கூட்டாக வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், 

இந்த கண்டன அறிக்கையில், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிவ சேனை உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com