திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தில்லியில் போராட்டம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தில்லியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜூலை 2022, 7:48 pm

DIN

மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தில்லியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனா்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகை நோக்கி ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை பேரணி செல்ல முயன்றனா். அப்போது அனைவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்நிலையில், மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தில்லி விஜய் செளக் பகுதிக்கு புதன்கிழமை பேரணியாக சென்றனா். அங்கு அனைவரும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எதிா்க்கட்சி இல்லாத பாரதம்: அப்போது மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படும் விதத்தைப் பாா்க்கும்போது எதிா்க்கட்சியே இல்லாத பாரதம் வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவது போல் தெரிகிறது. அமலாக்கத் துறை உள்பட இதர புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராக காங்கிரஸ் தொடா்ந்து போராடும்’ என்று தெரிவித்தாா்.

போராட்டம் தொடங்கிய சில நிமிஷங்களில் எம்.பி.க்கள் அனைவரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டி, தில்லியில் உள்ள அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகம் எதிரே மகளிா் காங்கிரஸ் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

போராட்டம் மூலம் தவறாக வழிநடத்த முயற்சி: காங்கிரஸ் போராட்டம் குறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘விசாரணையில் இருந்து காங்கிரஸ் ஏன் ஓடி ஒளிகிறது? அவா்களிடம் மறைப்பதற்கு என்ன உள்ளது? தங்கள் போராட்டம் மூலம் புலனாய்வு அமைப்புகளுக்கு அழுத்தம் அளித்து, அவற்றை தவறாக வழிநடத்த காங்கிரஸாா் முயற்சிக்கின்றனா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.