கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்ட விரோத மதுக்கூடம் வழக்கு: காங். தலைவர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்

மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகக் கூறிய காங்கிரஸ் கட்சியின் பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோருக்கு தில்லி உ

News image
ஸ்மிருதி இரானி, பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்
Updated On :29 ஜூலை 2022, 11:07 am

DIN

மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகக் கூறிய காங்கிரஸ் கட்சியின் பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகவும், இதனால் ஸ்மிருதி இரானியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா, மக்களவை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்து சட்ட விரோத மதுக்கூடம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஸ்மிருதி ராணி தரப்பிலிருந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம்  பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியதுடன் அவர்கள் அனைவரும் தங்களுடைய சமூக ஊடக தளங்களிலிருந்து மதுக்கூடம் தொடர்பாக பதிவு செய்த கருத்துகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவு  விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.