தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டில் புதிதாக மேலும் 20,409 பேருக்கு தொற்று

நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 20,577 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 20,409 ஆக அதிகரித்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :29 ஜூலை 2022, 4:49 am

DIN


நாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 20,577 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 20,409 ஆக அதிகரித்துள்ளது. 47 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 20,577 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 20,409 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,39,79,730-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,988 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 சதவீதமாக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,258 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 19,216 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,33,09,484-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.48 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2,03,60,46,307 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 38,63,960 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.