இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தியா - வங்கதேசம் இடையே 3வது பயணிகள் ரயில் தொடக்கம்

இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையே மூன்றாவது ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இன்று தொடங்கி வைத்தார்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:33 am

DIN

இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையே மூன்றாவது ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் இன்று தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்க மாநிலம் புது ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து வங்கதேச தலைநகர் தாக்காவுக்கு மிதாலி விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

சுமார் 513 கிலோ மீட்டரை 9 மணிநேரத்தில் கடக்கும் இந்த ரயில் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்படவுள்ளது. புது ஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிறு மற்றும் புதன்கிழமையும், தாக்காவிலிருந்து திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமையும் இயக்கப்படவுள்ளன.

தில்லியிலிருந்து காணொலி மூலம் நிகழ்வில் பங்கேற்று கொடியசைத்து ரயில் சேவையை துவக்கி வைத்த அஸ்வினி வைஸ்ணவ் பேசியதாவது:

இந்தியா - வங்கதேசத்திற்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட பாரம்பரியம்,  நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நட்பை அதிகரிப்பதிலும், பிணைப்பை வலுப்படுத்துவதிலும், உறவை மேம்படுத்துவதிலும் மிதாலி எக்ஸ்பிரஸ் மற்றொரு இலக்காக அமைந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.