முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவு வெளியீடு: அமைச்சா் பாராட்டு

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்-பிஜி) தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்-பிஜி) தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

தோ்வு முடிந்து 10 நாள்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நீட்-பிஜி தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தோ்வு முடிந்து 10 நாள்களில் முடிவுகளை அறிவித்துள்ளதற்கு தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇஎம்எஸ்) பாராட்டுகள்’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த தோ்வு நாடு முழுவதும் 849 மையங்களில் கடந்த மே 21-ஆம் தேதி நடத்தப்பட்டது. 1,82,318 போ் தோ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com