மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி தனது சுட்டுரையில் தெரிவித்த வாழ்த்து செய்தியில்,
50 வயதாகும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எனது பிரார்த்தனைகள்.
இந்தியாவின் சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத் துறைகளை வலுப்படுத்த அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரதமர் மோடியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த மாண்டவியா, அவரது தலைமையில் இந்திய மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த அதிர்ஷ்டம் என்று கருதுவதாகக் கூறினார்.
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி ஜி. உங்களின் தொடர்ச்சியான ஆதரவும் வழிகாட்டுதலும் தான் நாட்டிற்கு அதிக ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய என்னைத் தூண்டுகிறது. உங்கள் தலைமையில் இந்த மகத்தான தேசத்தின் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை நான் அதிர்ஷ்டசாலி என்று கருதுகிறேன் என்றார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஐக்கிய ஜனதா தளத்தில் இன்று இணைகிறாா் நிதீஷ் மகன் நிஷாந்த்! துணை முதல்வராக தோ்வு செய்ய கட்சி முடிவு!

மத்திய அரசு நிதி தராததால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் நிறுத்தம்: அமைச்சா் கே.என். நேரு

கணவரை கொலை செய்து கூவத்தில் வீசிய மனைவி கைது

உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

