கோல் இந்தியா: நிலக்கரி உற்பத்தி 10.82 கோடி டன்
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 10.82 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.


பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 10.82 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2022-23-ஆவது நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் 10.82 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ப்பட்டுள்ளது. இது, நிறுவனம் கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் உற்பத்தி செய்த 8.4 கோடி டன் நிலக்கரியுடன் ஒப்பிடுகையில் 28.8 சதவீதம் அதிகம்.
குறிப்பாக, மே மாதத்தில் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 4.21 கோடி டன்னிலிருந்து 5.47 கோடி டன்னாக 30 சதவீதம் என்ற அளவில் கணிசமாக அதிகரித்தது.
கடந்த மே மாதத்தில் மின்துறை நிறுவனங்களுக்கு 5.24 கோடி டன் நிலக்கரியை கோல் இந்தியா விநியோகம் செய்துள்ளது. இது, கடந்தாண்டு மே மாத விநியோகமான 4.45 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் அதிகம் என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...