
பணமோசடி வழக்கு தொடர்பாக, தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உடன் தொடர்புடைய 23 வங்கிக் கணக்குகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கியுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய அமைப்புகளுக்கும் பண மோசடியில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த அமைப்புகள் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த இரு அமைப்புகளுக்கு சொந்தமான 33 வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான 23 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 59,12,051 முடக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரீஹப் இந்தியா பவுண்டேஷனுக்குச் சொந்தமான 10 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ. 9,50,030 முடக்கப்பட்டுள்ளது.
இரு இயக்கங்களுகும் சொந்தமான 33 வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்தம் ரூ. 68.62 லட்சம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
"2009 ஆம் ஆண்டு முதல் பிஎஃப்ஐ -இன் வங்கி கணக்குகளில் ரூ.30 கோடிக்கும் அதிகமான ரொக்க வைப்புத்தொகைகளுடன் ரூ.60 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2010 முதல் ஆர்எஃப்ஐ-இன் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.58 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு இயக்கங்களும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களில் இருந்து அதிக அளவு பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிக்க | நர்சிங் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு... எங்கே? எப்போது? எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.