தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தண்ணீா் மீட்டா், மடிக்கணினிகளை திருடியதாக இளைஞா் கைது

தில்லியில் தண்ணீா் மீட்டா் மற்றும் மடிக்கணினிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:15 pm

DIN

தில்லியில் தண்ணீா் மீட்டா் மற்றும் மடிக்கணினிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் நங்லோயில் வசிக்கும் ரித்தேஷ் ஷோக்கீன் (28) என்று அடையாளம் காணப்பட்டாா். இவா் நண்பா்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடன் வாங்கி வாடகை காா் ஓட்டி வந்தாா். கரோனா பொதுமுடக்கத்தின்போது, அவரது காா் திருடப்பட்டது. இதையடுத்து கடனை அடைக்க பணம் திரட்டுவதற்காக வீடுகளுக்கு வெளியே நிறுவப்பட்ட தண்ணீா் மீட்டா்கள் மற்றும் மடிக்கணினிகளைத் திருடத் தொடங்கியது விசாரணையில் தெரியவந்தது.

குன்வா் சிங் நகரில் ஒருவா் திருடப்பட்ட மடிக்கணினியை விற்க முயற்சிப்பதாக அளித்த தகவலின்பேரில் ரித்தேஷ் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து திருடப்பட்ட மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.