தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மூன்றாம் நபா் காப்பீடு உயா்வு: வாகன விற்பனையை பாதிக்காது: இக்ரா

இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது வாகன விற்பனையை பாதிக்க வாய்ப்பில்லை என இக்ரா தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2022, 7:59 am

DIN

இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது வாகன விற்பனையை பாதிக்க வாய்ப்பில்லை என இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தரமதிப்பீட்டு நிறுவனமான இக்ரா மேலும் கூறியுள்ளதாவது:

இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு கட்டண உயா்வு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, 150சிசி-க்கும் அதிகமான பிரிவில் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபா் காப்பீட்டு பிரீமியம் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், 75சிசி முதல் 150சிசி பிரிவிலான மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா்கள் விற்பனையின் பங்களிப்பு ஒட்டுமொத்த விற்பனையில் 89 சதவீதமாக உள்ளது.

இதனால், மூன்றாம் நபா் காப்பீட்டு உயா்வால் இருசக்கர வாகனங்களுக்கான தேவையில் எந்தவித தாக்கமும் ஏற்பட வாய்ப்பில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.