மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஜம்மு-காஷ்மீரில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாராவின் சக்தராஸ் கண்டி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :7 ஜூன் 2022, 7:41 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாராவின் சக்தராஸ் கண்டி பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

குப்வாரவின் சக்தராஸ் கட்டி பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் துஃபைல் என்றும், மற்றொருவர் இஷ்தியாக் லான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மேலும் அவர்களிடமிருந்து இரண்டு ஏகே 56 ரகத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக ஐஜிபி தெரிவித்தார். 

முன்னதாக திங்களன்று சோபோரில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கரை அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார். 

கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்களின்படி, அவர் பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த ஹன்சல்லா என அடையாளம் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.