திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உ.பி.யில் சாலை விபத்து: பாஜக எம்எல்ஏ காயம்

உத்தரப் பிரதேசத்தில், சக்கியா பகுதியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பாஜக எம்எல்ஏ கைலாஷ் கர்வார் காயமடைந்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜூன் 2022, 10:12 am

DIN

உத்தரப் பிரதேசத்தில், சக்கியா பகுதியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பாஜக எம்எல்ஏ கைலாஷ் கர்வார் காயமடைந்தார். 

சக்தியா தொகுதியின் எம்எல்ஏ.வான கைலாஷ் கர்வார், ரகுநாத்பூரில் பாஜக தொண்டர் ஒருவரை சந்தித்துவிட்டு தனது கிராமமான சரதிக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவரது கார் கோலியா கிராமத்தின் அருகே நின்றிருந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் கர்வார், அவரது ஓட்டுநர் ஓம் பிரகாஷ், அனில் சரோஜ் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.