சீனாவில் விமான விபத்து: பல வீடுகள் எரிந்து நாசம்

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 
சீனாவில் விமான விபத்து: பல வீடுகள் எரிந்து நாசம்

மத்திய சீனாவில் ஹூபே மாகாணத்தில் விமானம் ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் நிகழும் மூன்றாவது விமான விபத்து இதுவாகும். விமான நிலையத்திற்கு அருகிலுள்ள லாஹெகோவ் நகரில் விமானம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்து பாராசூட் தாக்கியதில் விமானி சிறிய காயங்களுடன் உயிர்த் தப்பினார். விபத்து நடந்த இடத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரிவதை சீன சமூக ஊடகங்களில் விடியோக்கள் மூலம் பரவி வருகின்றது. 

விபத்து நடந்த பகுதிக்கு அவசர சிகிச்சைப் பிரிவு ஊழியர்கள் விரைந்துள்ளனர். 

கடந்த மாதம், 122 பேருடன் சென்ற சீனாவின் திபெட் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் நாட்டின் தென்மேற்கு சோங்கிங் நகரில் புறப்படும்போது ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்ததில் 40 பேர் காயமடைந்தனர்.

மார்ச் 12 அன்று, குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற போயிங் 737 விமானம் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியின் தெங்சியன் கவுண்டியில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த ஒன்பது பணியாளர்கள் உட்பட 132 பேரும் கொல்லப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com