
சட்ட விரோதப் பண பரிவா்த்தனை மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தது உள்ளிட்ட பணமோசடி தொடர்பான வழக்கில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
57 வயதாகும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், கடந்த மே 30-ஆம் தேதி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஜூன் 9-ஆம் தேதி வரை அவா் அமலாக்கத் துறை காவலில் உள்ளாா். கடந்த சில நாள்களாக சில ஹவலா ஆபரேட்டா்கள் மற்றும் ஜெயினிடம் விசாரணை நடத்திய பிறகு சில புதிய ஆதாரங்கள் மற்றும் தொடா்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை கருதுகிறது.
இந்த விவகாரத்தில் மேலும் தகவல்களை திரட்டும் வகையில், கடந்த திங்கள்கிழமை அவரது வீடுகளில் அமலாக்க இயக்கக அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
‘இந்த சோதனையானது தில்லி மற்றும் இதர இடங்களில் அமைந்துள்ள சத்யேந்தா் ஜெயினின் குடியிருப்பு வளாகங்களில் நடத்தப்பட்டுள்ளது. அவா் தொடா்புடைய வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத் துறை தெரிவித்தனர்.
இந்நிலையில், ஹவாலா தொடா்புடைய வழக்கில் சட்ட விரோதப் பண பரிவா்த்தனை மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தது உள்ளிட்ட பணமோசடி தொடர்பான வழக்கில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.