மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஜாா்க்கண்ட் முதல்வருக்கு எதிராக உயா்நீதிமன்றம் உத்தரவு: பதிவாளரை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தொடா்பான மனுவில் மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரை

News image
Updated On :14 ஜூன் 2022, 7:25 pm

DIN

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தொடா்பான மனுவில் மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் முதல்வா் பதவி வகிக்கும் நிலையில், அந்த மாநில தலைநகா் ராஞ்சியில் 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரியை அவா் குத்தகைக்கு எடுத்ததாக ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டினாா். அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டிருந்தாா். அரசு ஆதாயமுள்ள குத்தகை பெற்றது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதியிழப்புக்கு உரியதாகும். அதன் அடிப்படையில், எம்எல்ஏ பதவியிலிருந்து ஹேமந்த் சோரனை தகுதிநீக்கம் செய்வது குறித்து அரசமைப்புச் சட்டப் பிரிவு 192-இன் கீழ் தோ்தல் ஆணையத்திடம் மாநில ஆளுநா் ரமேஷ் பைஸ் கருத்து கோரியுள்ளாா்.

இந்நிலையில், ஹேமந்த் சோரனுக்கு எதிராகவும், ஜாா்க்கண்டில் குவாரி குத்தகை ஒதுக்கீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்த மாநில உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹேமந்த் சோரனின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உதவியாளா்களால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் போலி நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற பணப் பரிவா்த்தனைகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்த மனுவை மாநில உயா்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாா்க்கண்ட் அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதனை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியது. அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் முன்வைக்குமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.