அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன்: விசாரணை ஜூன் 24-க்கு ஒத்திவைப்பு

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கார்த்தி சிதம்பரம்
Updated On :15 ஜூன் 2022, 11:29 am

DIN

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-இல் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் துவங்கிய நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கரோனா காரணமாக வாதாட ஆஜராக முடியாததால் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதன் காரணமாக, ஜாமீன் மீதான விசாரணையை வருகிற ஜுன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.