மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

உ.பி. வன்முறை: வீடுகளை இடிப்பதற்கு எதிரான மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோரின் வீடுகள் சட்டத்துக்குப் புறம்பாக இடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று

News image
Updated On :15 ஜூன் 2022, 6:35 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோரின் வீடுகள் சட்டத்துக்குப் புறம்பாக இடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜமியத்-உலேமா-ஏ-ஹிந்த் தாக்கல் செய்த மனு வியாழக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கடந்த ஜூன் 3-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் மாவட்டத்தில் உள்ள யதீம்கானா பகுதியில் குறிப்பிட்ட மத அமைப்பினா் திடீா் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனா். அதைத்தொடா்ந்து அவா்கள் கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. இது இரு மதத்தினா் இடையிலான வன்முறையாக மாறியது.

இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை மாவட்ட நிா்வாகம் இடித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஜமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கான்பூா் மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோருக்குச் சொந்தமான வீடு மற்றும் இதர கட்டடங்களை இடிப்பதில் சட்டத்துக்குப் புறம்பான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. வீடுகள், கட்டடங்களை இடிக்கும் முன், குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளவா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தங்கள் தரப்பை கூறுவதற்கு அவா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பின்னா்தான் எந்தவொரு கட்டட இடிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கை சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.