ஜூன் 20 வரை ஆஜராக முடியாது: அவகாசம் கோரும் ராகுல்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறையிடம் அவகாசம் கோரியுள்ளார்.


நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை விசாரணைக்கு ஆஜராக முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறையிடம் அவகாசம் கோரியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்தி அவகாசம் கோரினார். இதையடுத்து, ஜூன் 23-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு புதிய அழைப்பாணை அனுப்பியது அமலாக்கத் துறை.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த மூன்று நாள்களாக அமலாக்கத் துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் இதுவரை மொத்தம் 30 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளாக புதன்கிழமை விசாரணை நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது. வெள்ளிக்கிழமை ஆஜராவதற்கு ராகுல் காந்தி அவகாசம் கோரியதால், அமலாக்கத் துறை அதற்கு அனுமதியளித்தது.
இந்த நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலையைக் காரணம் காட்டி ஜூன் 17 முதல் ஜூன் 20 வரை விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்ககோரி அமலாக்கத் துறையிடம் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவலறிந்த காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ராகுல் காந்தியின் இந்தக் கோரிக்கைக்கு அமலாக்கத் துறை தரப்பிலிருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...