தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயணக் கட்டணங்களை உயர்த்துகிறது ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன் விமானப் பயணக் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

News image

ஸ்பைஸ்ஜெட்

Updated On :16 ஜூன் 2022, 10:25 am

DIN

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன் விமானப் பயணக் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

பிரபல விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் எரிபொருள் விலையேற்றம் மற்றும் இதர இயக்கச் செலவுகளைச் சமாளிக்க பயணக் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக உச்சத்திலிருக்கும் எரிபொருள்களின் விலையேற்றம் காரணமாக வருவாயில் சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக, தற்போதைய கட்டணங்களிலிருந்து  10-15 சதவீதம் விலை உயர்த்தப்படும் எனவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பங்குச் சந்தை வர்த்தகத்திலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து மதிப்பை இழந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.