கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவலரைத் தாக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி மீது வழக்குப்பதிவு

தெலங்கானாவில் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது காவலரிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேணுகா சௌத்தரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட

News image
Updated On :20 ஜூன் 2022, 12:16 pm

DIN

தெலங்கானாவில் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது காவலரை தாக்க முயன்ற அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேணுகா சௌத்ரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக நேற்று(ஜுன்-15) மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கே.சி.வேணுகோபால், பூபேஷ் பாகெல் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சௌத்ரி தடுப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவரின் சட்டையைப் பிடித்து ஆவேசமாகப் பேசினார்.

இதனை, சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வரும் வேளையில் ரேணுகா சௌத்ரி மற்றும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர்  ரேவந்த் ரெட்டி ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 151, 140, 147, 149, 341, 353 (பொது ஊழியரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்க தாக்குதல் நடத்தியது) கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இருப்பினும், ரேணுகா சௌத்ரி “நான் தாக்க முற்படவில்லை. கூட்டத்தில் சமநிலையை இழந்ததால் கீழே விழாமல் இருக்க அவரை(காவலரை) பிடித்துக்கொண்டேன். இதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.