ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடன்பத்திரங்களின் மூலம் ரூ.350 கோடி திரட்டுகிறது எச்டிஎஃப்சி லைஃப்

விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.350 கோடி மூலதனத்தை கடன்பத்திரங்களை வெளியிட்டு திரட்டவுள்ளதாக எச்டிஎஃப்சி லைஃப் தெரிவித்துள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2022, 8:28 pm

DIN

விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.350 கோடி மூலதனத்தை கடன்பத்திரங்களை வெளியிட்டு திரட்டவுள்ளதாக எச்டிஎஃப்சி லைஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பங்குகளாக மாற்ற இயலாத 3,500 கடன்பத்திரங்களை வெளியிடுவதன் மூலமாக ரூ.350 கோடி மூலதனத்தை திரட்டும் திட்டத்துக்கு நிறுவனததின் இயக்குநா் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கடன்பத்திரங்களுக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.20 சதவீதமாக இருக்கும்.

மேலும், இந்த பத்திரங்கள் அனைத்தும் தேசிய பங்குச் சந்தையின் மொத்தவிற்பனை கடன் சந்தையில் பட்டியலிடப்படும் என எச்டிஎஃப்சி லைஃப் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் எச்டிஎஃப்சி பங்கின் விலை 3.48 சதவீதம் குறைந்து ரூ.551.25-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.