காங்கிரஸ் கட்சியில் இருந்து ராணுவத்தில் சேர விருப்பம் உடையவர்கள் அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றின் காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் இதனை தெரிவித்தார். இந்த சட்டத்தினை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை அரசிற்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டம் எந்த ஒரு திசையும் இல்லாமல் அர்த்தமற்றதாக உள்ளது எனவும், ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களின் நலனை அரசுக் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த புதிய அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து நாடு முழுவதும் 8 மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 325 பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாட்டின் பல மாநிலங்களிலும் அக்னிபத் திட்டத்தினை எதிர்த்து ரயில்நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர், பல இடங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது.
முன்னதாக ராகுல் காந்தி இந்தத் திட்டம் குறித்து பேசுகையில், இளைஞர்களின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொள்ள வேண்டும். விவசாய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற்றது போல் இந்த அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆழ்கடலுக்குள் கிரிக்கெட்! டி20 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்!

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி காலமானார்!

நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

