புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2022, 8:19 am

DIN

ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஒருவர் துப்பாக்கி முனையில் பிடிபட்டார். அவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. 

நேற்று (ஜூன் 19) இரவு முதல் ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் சார்பில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இன்று காலை வரை 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

இது தொடபாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளதாவது, ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நேற்று முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவர் நேற்று கொல்லப்பட்டனர். ஷோப்பியான் பகுதியில் உள்ளூரில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இதேபோன்று புல்வாமா பகுதியில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். குல்காம் பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் கொல்லப்பட்டனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.