கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராகுல் காந்தியிடம் 4-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன்பாக 4-வது நாளாக இன்று(திங்கள்கிழமை) ஆஜராகியுள்ளார்.

News image
Updated On :20 ஜூன் 2022, 5:57 am

DIN

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன்பாக 4-வது நாளாக இன்று(திங்கள்கிழமை) ஆஜராகியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கெனவே ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்கள் ஆஜராகினார். 

இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா். ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுதத்தன் அடிப்படையில் அவர் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகக் கூறினர். 

ஏற்கெனவே  3 நாள்களில் 30 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4-வது நாளாக ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.