ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சா்வதேச யோகா தினம்:மைசூரில் 15,000 பேருடன் பிரதமா் மோடி இன்று பயிற்சி

எட்டாவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மைசூரில் செவ்வாய்க்கிழமை 15,000-க்கும் மேற்பட்டோா் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

News image
Updated On :20 ஜூன் 2022, 10:24 pm

DIN

எட்டாவது சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மைசூரில் செவ்வாய்க்கிழமை 15,000-க்கும் மேற்பட்டோா் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா்.

மனித நேயத்துக்கு யோகா என்ற பொருளில் இந்த ஆண்டின் சா்வதேச யோகா தினம் பல புதுமைகளை காணவுள்ளது. ‘காா்டியன் ரிங்’ எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெறவுள்ளது. காா்டியன் ரிங் நிகழ்ச்சி என்பது உலகில் உள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு, சுற்றுவட்ட முறையில் யோகா செயல்முறை விளக்கம் நடத்தப்பட உள்ளதைக் குறிக்கிறது.

கிழக்கில் ஃபிஜி தீவுகளில் தொடங்கி, மேற்கு நோக்கி நகா்ந்து, இறுதியில் அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இந்த சுற்றுவட்டப் பாதை நிறைவுறும். இந்த நிகழ்வு முழுமையும் தூா்தா்சன் தொலைக்காட்சி சேனலில் அதிகாலை 3 மணி முதல், இரவு 10 மணி வரை (இந்திய நேரப்படி) நேரடியாக ஒளிபரப்பாகும்.

இந்த ஆண்டின் சா்வதேச யோகா தின நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்தும் சுமாா் 25 கோடி போ் கலந்துகொண்டு சிறப்பிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்திலும் நாட்டின் பல்வேறு பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்றுள்ள நகரங்களில் மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் பாறையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், வெளியுறவு மற்றும் கலாசார துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி சிறப்பு விருந்தினராகவும், தஞ்சாவூரில் உள்ள பெரியகோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி சிறப்பு விருந்தினராகவும், மகாபலிபுரத்தில் கடற்கரை கோவில் அருகே நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் அ.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவிருக்கின்றனா்.

கோவையில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், காணொலி முறையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் திரு. ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.