சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதுக்கு கரோனா

காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

News image
குலாம் நபி ஆசாத்
Updated On :21 ஜூன் 2022, 8:50 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவரான அவா் இது தொடா்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியும் அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் கரோனாவில் இருந்து விடுபட்டாலும், சுவாசப் பாதை தொற்றுக்காகத் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். திங்கள்கிழமை (ஜூன் 20) அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.