

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கரோனா சோதனைக்குப் பிறகு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில்,
எனக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு அவர் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் முகக்கவசம் அணிந்தபடி இருக்கும் கோஷ்யாரி (80), ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.