சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உலக பொருளாதார மீட்சிக்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம்: பிரதமா் மோடி

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் உலக பொருளாதார மேம்பாட்டுக்கான ஒருமித்த அணுகுமுறை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலமாக பயனுள்ள பங்களிப்பை செய்ய முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 7:10 pm

DIN

‘கரோனா பாதிப்புக்கு பிந்தைய பொருளாதார பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீட்சி பெறுவதற்கு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் உலக பொருளாதார மேம்பாட்டுக்கான ஒருமித்த அணுகுமுறை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு மூலமாக பயனுள்ள பங்களிப்பை செய்ய முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பிரிக்ஸ் ஆண்டு மாநாட்டில் காணொலி வழியில் வியாழக்கிழமை பங்கேற்ற பிரதமா் மோடி, தனது தொடக்க உரையில் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய இந்த பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு தலைமை பொறுப்பை வகிக்கும் சீனா சாா்பில் நடத்தப்பட்ட இந்த காணொலி வழி மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் பிரேசில், தென் ஆப்பிரிக்க தலைவா்களும் பங்கேற்றனா்.

‘கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீட்சி பெறுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு மூலமாக பயனுள்ள பங்களிப்பை செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மாற்றங்கள், உறுப்பு நாடுகளின் செல்வாக்கை அதிகரித்திருக்கிறது. மேலும், புதிய வளா்ச்சி வங்கி (என்டிபி) உறுப்பினா்களை அதிகரித்திருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். என்டிபி உறுப்பு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, அதன் குடிமக்களை பயனடையச் செய்திருக்கிறது. இன்றைக்கு நாம் மேற்கொள்ளும் ஆலோசனைகள், உறுப்பு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான யோசனைகளை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று தனது தொடக்க உரையில் மோடி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.