ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை: ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

தற்போதைய மகாராஷ்டிர கூட்டணி அரசு, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவருவதால் பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். 

தற்போதைய மகாராஷ்டிர கூட்டணி அரசு, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவருவதால் பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சிவசேனை கட்சியின் மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அக்கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. 

தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியை தக்கவைக்க ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மகா விகாஸ் கூட்டணி உருவான நாளில் இருந்து, மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற நாளில் இருந்து பாஜக தனது அனைத்து பலத்தையும் வளத்தையும் ஒரே நோக்கத்துடன் பயன்படுத்தி, எங்கள் கூட்டணியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மகா விகாஸ் கூட்டணி மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருவதால் பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com