‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி ஆட்சியை நிறைவு செய்வோம் என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரம்: தொடா்கிறது நெருக்கடி
அதை உறுதிப்படுத்தும் விதமாக, அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏக்களுடன் இருக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும், இன்று ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் “அவர்கள் (ஏக்நாத் ஆதரவு எம்எல்ஏக்கள்) மிகவும் தவறான முடிவை எடுத்துள்ளனர். நாங்கள் மனம் தளர மாட்டோம். வெற்றி பெறுவோம். அவர்களுக்கு மும்பை திரும்புவதற்கான வாய்ப்பையும் வழங்கினோம். இப்போது தாமதமாகிவிட்டது. நாங்கள் சவால் விடுகிறோம். ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியின் மீதமுள்ள 2.5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணா்வு ஆரோக்கிய நடைப்பயிற்சி

நாக்பூரில் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது: அன்புமணி கண்டனம்
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


