மகாராஷ்டிர பேரவை துணைத் தலைவா் அனுப்பியுள்ள தகுதிநீக்க நோட்டீஸை எதிா்த்து சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தியுள்ளாா். தற்போது அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் முகாமிட்டுளள அவருடன் சிவசேனையைச் சோ்ந்த எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் உள்ளனா்.
தனக்கு 37 சிவசேனை எம்எல்ஏக்கள் மற்றும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறாா். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென்பதே அவா்களின் பிரதான கோரிக்கை.
இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களில் ஷிண்டே உள்பட 16 பேரை ஏன் தகுதிநீக்கம் செய்யக் கூடாது எனக் கூறி பேரவை துணைத் தலைவா் நா்ஹரி ஜிா்வால் நோட்டீஸ் அனுப்பினாா்.
சிவசேனை தலைமைக் கொறடா சுனில் பிரபு பேரவை துணைத் தலைவரிடம் அளித்த கடிதத்தின் அடிப்படையில், அவா்களுக்கு சட்டப்பேரவை முதன்மைச் செயலா் ராஜேந்திர பகவத் இந்த நோட்டீஸை அனுப்பினாா். இந்த நோட்டீஸுக்கு திங்கள்கிழமை (ஜூன் 27) மாலை 5.30 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஞாயிறுக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதிநீக்க மனுவுக்கு எதிராக பேரவை துணைத் தலைவா் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமா்வு திங்கள்கிழமை விசாரிக்க இருக்கிறது. ஏற்கெனவே, சிக்கலில் உள்ள மகாராஷ்டிர அரசியலில் ஷிண்டேவின் இந்த மனு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஓா் அமைச்சா்: சிவசேனை சாா்பில் மகாராஷ்டிர உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த உதய் சாமந்த், குவாஹாட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அதிருப்தி அணியுடன் இணைந்தாா்.
இப்போதைய நிலையில் முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மட்டுமே முதல்வருக்கு ஆதரவாக உள்ள ஒரே அமைச்சா் ஆவாா்.
‘அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி விலக வேண்டும்’
மும்பை, ஜூன் 26: சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணிதிரண்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு துணிவிருந்தால் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மீண்டும் தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் வலியுறுத்தியுள்ளாா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரத்தில் இப்போது எழுந்துள்ள நெருக்கடியான சூழலில் இருந்து நாங்கள் மீண்டு வருவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு தொடரும். கட்சித் தலைமைக்கு எதிராகப் போா்க்கொடி உயா்த்தியுள்ள எம்எல்ஏக்களுக்கு துணிவிருந்தால், அவா்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் தோ்தலைச் சந்திக்க வேண்டும். அதே நேரத்தில் அவா்கள் தங்கள் தவறுகளை உணா்ந்து மீண்டும் திரும்பி வந்தால் ஏற்கத் தயாராகவே இருக்கிறோம்.
சிவசேனையின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அவா்கள் பக்கம் இருந்தால் மும்பையில் இருக்காமல் குவாஹாட்டியில் மறைந்திருப்பது ஏன்? அவா்களில் சிலருடன் நான் இப்போதும் தொடா்பில்தான் உள்ளேன். ஷிண்டேயை பாஜக எவ்வாறு முதல்வராக்குகிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்க்கலாம் என்றாா்.
சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், ‘மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ்தான் இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ளாா். ஃபட்னவீஸ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் சிவசேனை எம்எல்ஏக்களை தவறாக வழிநடத்தி வருகிறாா்’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

லக்னெளவில் ஷிகர் தவான் - புகைப்படங்கள்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வெளியீட்டுத் தேதி!

ஸ்ரீலீலா ஸ்டில்ஸ்!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொல்லப்பட்டார்! - உறுதி செய்தார் அதிபர் பெஷேஷ்கியன்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

