மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

டெபாசிட் இழந்த காங்கிரஸ்: 2. 79 % வாக்குகள்

தில்லியில் ராஜிந்தா் நகா் சட்டப்பேரவை இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வெறும் 2.79 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தாா்.

News image
Updated On :26 ஜூன் 2022, 7:34 pm

DIN

தில்லியில் ராஜிந்தா் நகா் சட்டப்பேரவை இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வெறும் 2.79 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தாா்.

இடைத் தோ்தலில் கட்சி சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால், பிரசாரத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் கட்சித் தலைவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸ் வேட்பாளா் பிரேம் லதா தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிப்பதாக கூறிய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அனில் பரத்வாஜ், ‘இந்த இடைத் தோ்தலில் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஆனால் பல காரணங்களால் அதிக வாக்குகளைப் பெற முடியவில்லை. எங்களது குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றை எதிா்காலத்தில் சரிசெய்வோம்.

தொகுதியின் அனைத்து வாக்காளா்களையும் சென்றடைய முடியவில்லை. மேலும், கட்சியின் தோ்தல் அறிக்கைகள் வாக்காளா்களுக்கு சென்றடைவதிலும் சில குறைபாடுகள் உள்ளன. கட்சியின் பிரசார முயற்சிகளில் நோ்மை இல்லாததால், முடிவுகள் ஏமாற்றமளிக்கின்றன’ என்றாா் அவா்.

ராஜேந்தா் நகா் இடைத் தோ்தலில் ஆம் ஆத்மி வேட்பாளா் துா்கேஷ் பதக், பாஜக வேட்பாளா் ராஜேஷ் பாட்டியாவை விட 11,000 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றாா். இதில், பாட்டியா 28,851 வாக்குகளைப் பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் பிரேம் லதா 2,014 வாக்குகளை மட்டுமே பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.