பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

கரோனாவால் சரிந்த ஆணுறைகள் விற்பனை: விளைவுகள் என்ன?

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆணுறைகளின் விற்பனை  பெருமளவில் குறைந்ததால் நேர்ந்த விபரீதம் என்ன?

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:08 pm IST

கரோனா பெருந்தொற்று பாதித்த 2020-21 ஆம் ஆண்டில், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமான ஆணுறைகள், நாட்டில் மிகக்  குறைந்த  அளவே விற்பனையானதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கருத்தடைச் சாதனமான ஆணுறைகள் விற்பனையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.

கரோனா காலத்தில் விதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற கட்டுப்பாடுகள்தான் இந்த  விற்பனை பாதிப்புக்குக் காரணம்  என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவலறியும் உரிமைச்  சட்ட செயற்பாட்டாளரான சந்திரசேகர கௌர் என்பவரின் கேள்விக்கு மத்திய  சுகாதார மற்றும்  குடும்ப நலத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

கரோனா முதல் அலையின் தீவிர பரவல் காரணமாக, இந்தியாவில்  மிகக் கடுமையான  கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த நிலையில், 2020-21  நிதியாண்டில் 24.431 கோடி ஆணுறைகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன என்று  அரசுத் தகவலை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளார் கௌர்.

இந்த அளவுக்குக் குறைவான எண்ணிக்கையில் ஆணுறைகள்  விற்கப்பட்டிருப்பதன் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் 10 மடங்கிற்கும் அதிகமான அளவில் தேவையற்ற கருத்தரிப்புகள் நேர்ந்திருக்கும் என்று   குழந்தை பிறப்புத் தடுப்பு ஆய்வாளர் டாக்டர் ராஜீவ ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஆணுறைகளின் விற்பனைக் குறைவு மற்றும் தேவையற்ற கருத்தரிப்புகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் தொடர் விளைவுகள் பற்றி உறுதியான தகவல்கள்  எதுவும் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.