தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா பரவல்: மாநில அரசுகளுக்கு சுகாதாரத் துறை கடிதம்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. 

News image
Updated On :28 ஜூன் 2022, 3:42 pm

DIN


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு சில மாநிலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் பாதிக்கப்படுவோர் விகிதம் 45% அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திருவிழாக்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

மருத்துவ கட்டமைப்பு வசதி, ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்து மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளைச் சுற்றிலும் கரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

கரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.