தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுவையில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 100ஆகக் குறைவு

புதுவையில் கரோனா தொற்று நோய்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 100ஆக உள்ளது. 

News image
Updated On :1 மார்ச் 2022, 8:33 am

DIN

புதுவையில் கரோனா தொற்று நோய்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 100ஆக உள்ளது. 

யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு மட்டுமே கரோனா பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,726 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஜி ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதுச்சேரியில் 3 பேரும், யானத்தில் 2 பேரும், காரைக்கால் ஒருவருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. மாஹேவில் புதிதாக எந்த தொற்றும் பதிவாகவில்லை. 

தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 100 ஆகக் குறைந்துள்ளது. 10 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 90 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 24 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், ஒட்டுமொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,63,664 ஆக  உள்ளது. 

சுகாதாரத்துறை இதுவரை 22,16,254 மாதிரிகளைப் பரிசோதித்துள்ளதாகவும், அவற்றில் 18,61,119 மாதிரிகள் எதிர்மறையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

புதிதாக இறப்பு பதிவாகவில்லை. இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 1,962 ஆக உள்ளது. சுகாதாரத்துறை இதுவரை 15,92,350 டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளது என்று இயக்குநர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.