தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு: ஒரே இரவில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

தில்லி உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 
தில்லி உயிரியல் பூங்கா மீண்டும் திறப்பு: ஒரே இரவில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

தலைநகரில் கரோனா தொற்று அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு சுமார் 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த தில்லி உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

கடந்த 4ஆம் தேதி பொதுமக்களுக்காக உயிரியல் பூங்கா மூடப்பட்டது மற்றும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளமும் முடக்கப்பட்டது. 

இதுகுறித்து பூங்காவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 

நேற்றிரவு உயிரியல் பூங்காவின் ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்காக 
இணையதளம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. ஒரே இரவில் 4 ஆயிரம் டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. 

மக்களின் சிரமத்தைத் தவிர்க்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியைச் செய்துள்ளது. 

காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மதியம் 12:30 முதல் மாலை 4:30 மணி வரை என்று ஒரு நாளில் 4,000 பார்வையாளர்கள் மட்டுமே மிருகக்காட்சிசாலையில் இரண்டு இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு நிர்வாகம் அனைத்து பிரிவு மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com